புதிய சட்டம் முகநூல்
சினிமா

ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்?

வன்முறை மற்றும் ஆபாச பதிவுகள் சமூகத்தில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் அதிகரித்துவருகின்றன.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஓடிடி மற்றம் டிஜிட்டல் தளங்களின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் அவற்றை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லாத நிலையே உள்ளது.

வன்முறை மற்றும் ஆபாச பதிவுகள் சமூகத்தில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் அதிகரித்துவருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய பெண்கள் ஆணையம் ஆகிய தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணதற்போதுள்ள சட்டங்களின் தன்மை குறித்தும் புதிய சட்டங்களின் தேவைப்பாடு குறித்தும் ஆய்வு செய்து வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தேவைப்படும் மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கை இதற்காக உள்ள குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.