சினிமா

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ: தீர்மானம் நிறைவேற்றிய ராதாரவி!

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ: தீர்மானம் நிறைவேற்றிய ராதாரவி!

sharpana

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோ: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ராதாரவி!

இந்தியாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக இந்திய திரையுலகமே பிரார்த்தனை செய்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்தவாரம் காலமானார்.

இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்படும் என்று டப்பிங் யூனியன் செயற்குழுவில் நடிகர் ராதாரவி இன்று தீர்மானம் இயற்றியுள்ளார். எஸ்.பி.பி டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர் என்பதால் அவரது சாதனைகளை கெளரவிக்கும் விதமாக இந்த தீர்மானம் இயற்றப்படுள்ளது என்று கூறப்பட்டுள்ளது