பெப்சி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தை பிலிம்சேம்பர் அலுவலகத்தில் 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்துவது குறித்து பெப்சி நிர்வாகிகளும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர்.
பெப்சி தொழிலாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு எற்படும் என சிறுபட தயாரிப்பாளர்கள் அச்சம்.