பாலகிருஷ்ணா, ஸ்ரேயா, கிரியா தத் நடித்துள்ள தெலுங்கு படம், ‘பைசா வசூல்’. பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
பிரமாண்ட ஆக்ஷன் படமான இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கார் சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில், இது ஆக்ஷன் படம் என்று சொல்லும் பாலகிருஷ்ணா, டூப் போடாமல்,
பிஎம்டபிள்யூ காரை வேகமாக ஓட்டி, புழுதி பறக்க அதை நின்ற இடத்தில் இருந்தே திருப்பும் காட்சி மிரட்டலாக இடம்பெற்றுள்ளது. காருக்குள் இருக்கும் ஸ்ரேயா அதைக் கண்டு பயப்படுவதும் பின்னர் பாலகிருஷ்ணாவை படக்குழு பாராட்டுவதும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.