பிரபல மலையாள நடிகை நஸ்ரியா. தமிழில் `நேரம்', `ராஜா ராணி', `நையாண்டி', `வாயை மூடி பேசவும்', `திருமணம் எனும் நிக்கா' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் 2018ல் மலையாளப்படமான `கூடே' மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். பின்பு `Trance', `அன்ட்டே சுந்தரானாகி', `சூக்ஷ்மதர்ஷினி' போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும் தமிழ் சினிமாவுக்கு அவர் எப்போது திரும்ப வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட `புறநானூறு' படத்தில் நஸ்ரியா நடிப்பார் என அறிவித்தனர். அப்படம் கைவிடப்பட, நஸ்ரியாவின் தமிழ் சினிமா கம்பேக்கில் பிரேக் விழுந்தது. ஆனால், இப்போது நஸ்ரியா தமிழில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். அது சினிமா மூலம் அல்ல, ஒரு வெப் சீரிஸ் மூலமாக. சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `'The Madras Mystery – Fall of a Superstar' என்ற சீரிஸ்தான் அது. இதில் நட்டி, சாந்தனு பாக்யராஜ், நாசர், ஒய் ஜி மகேந்திரன் எனப் பலரும் நடித்துள்ள இந்த சீரிஸில் நஸ்ரியா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் நஸ்ரியாவின் தமிழ் கம்பேக் உறுதியாகியுள்ளது.
இது 1940ல் இந்தியாவில் நிகழ்ந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகவும், இந்த சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 6ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.