மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நஸ்ரியா கடந்த 2010 ஆம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார்.
ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர், மலையாளத்தில் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஆறு ஆண்டுகளில் வரதன், கும்ப்ளங்கி நைட்ஸ் உள்ளிட்டப் படங்களை தயாரித்த நஸ்ரியா, கணவர் பகத் பாசிலுடன் இந்த ஆண்டு வெளியான ’ட்ரான்ஸ்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில், நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்த நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இன்று இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. Ante sundhariniki என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இவர் , எற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்கிய மெண்டல் மதிலோ, கடந்த ஆண்டு இயக்கிய புரோச்சேவரேவருரா படங்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது!