ஜல்லிக்கட்டுக்கான இளைய தலைமுறையின் போராட்டம் நமது கலாச்சாரத்துக்கு எதிரான அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நமது பலத்தை காட்டும் என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான இளைய தலைமுறையின் அமைதி போராட்டம் பெருமைப்பட வைக்கிறது என்று கூறியுள்ளார்.
எனக்கு அங்கீகாரமும் அடையாளமும் தந்தது தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான். இந்த உணர்ச்சிகரமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் மக்களோடு நானும் உறுதுணையாக இருப்பேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் இந்த உணர்ச்சிகரமான போராட்டம் நிச்சயம் வெற்றியை தரும் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான இளைய தலைமுறையின் இத்தகைய போராட்டம் நமது கலாச்சாரத்துக்கு எதிரான அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு பலத்தை காட்டும் எனவும் இது தமிழக கலாச்சார பெருமையை உலகமெங்கும் ஒலிக்கச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை என்றும் நடிகை நயன்தாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.