சினிமா

ஸ்டைலிஷ் லுக்கில் லைக்ஸ் அள்ளும் நயன்தாரா! - 'நிழல்' பட வைரல் புகைப்படங்கள்!

sharpana

மலையாளத்தில் ’நிழல்’ படத்தில் நடித்துவரும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.

கடந்த ஆண்டு நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் வெற்றி பெற்றதோடு, ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ பாடல் வைரல் ஹிட் ஆனது. அதனால், மீண்டும் பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் ’நிழல்’ படத்தில் நடித்து வருகிறார்.

த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஏற்கனவெ, குஞ்சாக்கோ போபனுடன் ’ட்வென்டி 20’ படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில்தான், நயன்தாரா ’நிழல்’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும், குஞ்சாக்கோ போபன் வீட்டிற்கு நயன்தாரா விசிட் செய்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களின் வைரல் ஆகின.

இந்நிலையில், வெள்ளை நிற ஷர்ட்… நீல நிற ஸ்கர்ட்டில் நயன்தாரா நிற்கும் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் தற்போது வைரலாகி லைக்ஸ்களை  குவித்து வருகின்றன. வெள்ளை, நீலம் இரண்டும் கலந்த கலவையில் இருக்கும் நயன்தாராவின் உடை வானத்தை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள்.