நடிகை நயன்தாராவின் புதிய படத்தை ‘லக்ஷ்மி’குறும்படத்தின் இயக்குநர் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘லக்ஷ்மி’ குறும்படத்தின் மூலம் சமூக வலைதளத்தை வைரலாக்கியவர் சர்ஜுன் கே.எம். அதனை அடுத்து இவர் ‘மா’ என்ற குறும்படத்தை இயக்கினார். ஆனால் இந்தப் படம் முன்னைய படத்தைபோல எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. இந்நிலையில் இவர் இயக்கப் போகும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்கஇருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை கெஜெஆர் ஸ்டியோ தயாரிக்க இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அவுட் அண்ட் அவுட் ஹாரர் படமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காஸ்ட் அண்ட் க்ரூ பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.