சினிமா

நயன்தாராவுடன் நடிக்கிறார் சினேகா

நயன்தாராவுடன் நடிக்கிறார் சினேகா

Rasus

சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ படத்தில் சினேகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, மலையாள நடிகர் பஹத் பாசில் உட்பட பலர் நடிக்கும் படம், ’வேலைக்காரன்’. இதில் சினேகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி சினேகா கூறும்போது, ‘பஹத் பாசிலின் ரசிகை நான். அவருடன் ஏற்கனவே மலையாளப் படத்தில் நடித்திருக்கிறேன். அதில், அவருடன் எனக்கான காட்சிகள் குறைவு. இதில் சேர்ந்து நடிக்கிறோம். படத்துக்காக உடல் எடையை குறைத்துள்ளேன். இந்தப் படத்தில் எனது கேரக்டர் பற்றி அதிகமாக இப்போது சொல்ல இயலாது. விரைவில் இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்’ என்றார்.