தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பு பக்கமே தலை காட்டாமல் இருந்தார். சில வருடங்களுக்கு முன் அந்த முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் நடிக்க வந்தார். ஜோதிகாவின் ரீஎன்ட்ரி பற்றி கருத்து சொன்ன சூர்யா அவர் தொடர்ந்து நடிக்க விரும்பினால் நான் தடை போடமாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது மகளிர் மட்டும் வெளிவந்தது. அவரது காலத்தில் சிம்ரன், லைலா, ரம்பா தான் சக நடிகைகளாக இருந்தனர். இவர்களுடன் இணைந்து ஜோதிகாவும் நடித்துள்ளார். அவரது காலகட்டத்திற்கு பின் நடிக்க வந்தவர் நயன்தாரா. அவரது நடிப்பை புகழ்ந்து பேசியுள்ளார் ஜோதிகா. நயன்தாரா நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் அவரது நடிப்பில் நல்ல பாணி தென்படுவதாகவும் ஜோதிகா கூறியுள்ளார்.