சினிமா

காதலரோடு ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய நயன்தாரா

காதலரோடு ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய நயன்தாரா

sharpana

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் கேரளாவில் ஓணம் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று உலகம் முழுக்க வசிக்கும் கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா சூழலால் படபிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டு சினிமாத்துறையினர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கொரோனாவிலும் தங்கள் பாரம்பரிய  பண்டிகையை கொண்டாடவேண்டும் என்று நினைத்த நயன்தாரா ஓணம் கொண்டாட நேற்று சென்னையிலிருந்து தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் பறந்த புகைப்படங்கள் முழுக்க வைரலானது.

இந்நிலையில், இந்த ஜோடிகள் கேரளாவிலுள்ள வீட்டில் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். கேரளாவின் பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலோடு ஓணம் பண்டிகையை கொண்டாடுவது ‘நயன்தாரா’ பண்டிகையாக மாற்றிவிட்டது.