சினிமா

’நிழல்’ படக்குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா!

sharpana

கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா. இதனையொட்டி, அவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் டீசரும், மலையாளத்தில் அவர் நடித்துவரும் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும், மோகன்லாலும் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் வெற்றி பெற்றதோடு ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ பாடல் வைரல் ஹிட் ஆகியது. அதனால், மீண்டும் பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என் பட்டாத்திரி இயக்கத்தில் நிழல் படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.

நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்தாலும் தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். லவ் ஆக்‌ஷன் ட்ராமா வெற்றி பெற்றதால் மலையாள சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்திற்காக, தனது சம்பளத்தையும் குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொச்சினில் நடைபெறும் ஷூட்டிங்கில் நயன்தாரா தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.