சினிமா

அஜ்மீர் தர்காவில் நடிகை நயன்தாரா வழிபாடு

அஜ்மீர் தர்காவில் நடிகை நயன்தாரா வழிபாடு

webteam

ஜெய்ப்பூரிலுள்ள அஜ்மீர் தர்ஹாவில் நடிகை நயன்தாரா பக்தியுடன் இஸ்லாமிய முறைப்படி வழிபாடு செய்தார். அந்தப் புகைப்படங்கள் இனையதளத்தில் வெளியாகியது.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கி வரும் வேலைக்காரன் திரைப்படத்தின் மூன்று நாள் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைப்பெற்றது. இங்கே டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இதனை விவேகா எழுதியுள்ளார். அதற்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அந்தப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மாலை படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்த பிறகு அருகிலுள்ள அஜ்மீரில் தர்ஹாவிற்கு சென்றனர். அங்கே இஸ்லாமிய வழக்கப்படி நடிகை நயன்தாரா வழிபாடு நடத்தினார்.தற்போது தர்காவில் படக்குழுவினர் எடுத்த புகைப்படம் வெளியாகியது.அதில் சிவகார்த்திகேயன் தொப்பி அணிந்தபடியும் நயன் முக்காடு போட்டபடியும் இருந்தனர்.

இந்நிலையில் படக்குழு இன்று சென்னை திரும்பி உள்ளனர்.