சினிமா

செல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.ரஞ்சித்!

செல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.ரஞ்சித்!

webteam

செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் நடிகைகள் நயன்தாரா, பார்வதி, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இளம் வயதிலேயே மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள நபர்களின் பட்டியலை ஜி-கியூ (GQ) என்ற இதழ் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. இதில், வர்த்தகம், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளில் செல்வாக்குமிக்க 50 இளம் இந்தியர்கள் இடம்பெறுவார்கள். 40 வயதுக்கு கீழுள்ள அவர்களைப் பற்றிய இந்த வருட பட்டியல், சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

அதில் நடிகைகள் நயன்தாரா, பார்வதி, டாப்ஸி, மிதிலா பால்கர், நடிகர் அயூஷ்மன் குரானா, பத்திரிகையாளர் சந்தியா மேனன், இயக்குனர் பா.ரஞ்சித் உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.

நடிகை நயன்தாரா, சமீபத்திய படங்களில் தனது நடிப்பின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக் கப்படும் அவர், போர்ப்ஸ் பட்டியலிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி, சினிமாவில் பெண்களுக்கு எதிரான பிரச்னை களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மலையாள சினிமாவில், திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

தனது படங்களின் மூலம் சிறந்த கருத்துகளை தெரிவித்து வரும் பா.ரஞ்சித், சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.