''இயற்கை எப்போதும் ஏராளமாகத் தருகிறது'' என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்
விவசாயத்தை காக்கவும், விவசாயிகளுக்கு துணை நிற்கவும் உழவன் பவுண்டேசனை நடத்தி வருகிறார் நடிகர் கார்த்தி. இந்த பவுண்டேசன் மூலம்
நீர்நிலைகளை காக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சூறாவளி ஓடையை சீர்படுத்தியது தொடர்பான புகைப்படத்தை உழவன்
பவுண்டேசன் பகிர்ந்துள்ளது.
கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் பகுதியை சிறப்பாக சீரமைத்து வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் வழியாக நீர்வரத்து செல்கிறது. இதனை பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, ''இயற்கை எப்போதும் ஏராளமாகத் தருகிறது'' என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பலரும் இயற்கையை காக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளனர். மேலும், உழவன் பவுண்டேசனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.