சினிமா

தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ‘மரைக்காயர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

மூன்று தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ’மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு,அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.ஆனால், கொரோனா சூழலால் வெளியாகவில்லை.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது என்று மோகன்லால் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.