சினிமா

ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது

ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது

webteam

சிறந்த மாநில மொழி படத்துக்கான தேசிய விருது ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் படத்துக்கு கிடைத்துள்ளது.

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது. இதில் தமிழில் சிறந்த படமாக ’ஜோக்கர்’ தேர்வாகியுள்ளது. திரைப்பட எழுத்தாளருக்கான விருது தனஞ்செயனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. தர்மதுரை படத்தில் அவர் எழுதிய எந்த பக்கம் என்ற பாடலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த வருடம் புதிதாக சண்டை இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது பீட்டர் ஹெயினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது சூர்யா நடித்துள்ள 24 படத்துக்கு கிடைத்தது.