சினிமா

மன்னிப்புக் கேட்கவில்லை என்றால்..? நடிகை ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ்!

மன்னிப்புக் கேட்கவில்லை என்றால்..? நடிகை ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ்!

webteam

தன் மீது கூறியுள்ள புகாருக்கு நடிகை ஸ்ரீரெட்டி ஏழு நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நடிகர் நானி அவருக்கு வக்கீல் நோட்டீ ஸ் அனுப்பியுள்ளார். 

தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காகப் படுக்கையை பகிரும் பழக்கம் இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகாரைக் கூறியிருந்தார். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் சேகர் காமுலா, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு வின் மகனுமான அபிராம் டகுபதி, இயக்குனர்கள் கோனா வெங்கட், கொரட்டலா சிவா, நடிகை ஜீவிதா ஆகியோர் மீதும் பாலியல் புகார் கூறி னார். அவருடன் சிலர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், நடிகர் நானி பற்றியும் பரபரப்பு புகார் கூறினார். வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் வாழ்க்கையை அவர் நரகமாக்கவிட்டார் என்று ம் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் நன்றாக நடிப்பவர் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டி பங்கேற்க இருந்ததாகவும் அவர் கலந்துகொண்டால், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறியதால், தான் அதில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். அதோடு தன்னை பாலியல் ரீதியாக நானி சுரண்டியதாகவும் கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமாவில் மேலும் சர்ச்சையானது.

இந்நிலையில், ’பொறுமைக்கு ஒரு எல்லையுண்டு’ என்று கொதித்தெழுந்த நானி, ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஏழு நாட்களுக்குள் ஸ்ரீரெட்டி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இல்லை என்றால் வழக்கைச் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள் ளார்.