சினிமா

“அவங்க சொல்றதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லுங்க” - நானா படேகர் காட்டம்

“அவங்க சொல்றதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லுங்க” - நானா படேகர் காட்டம்

rajakannan

பத்து வருடங்களுக்கு முன்பு தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ கூறிய புகார் குறித்து நடிகர் நானா படேகர் பதில் அளித்துள்ளார். 

மிரர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறும்போது நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். பாலியல் பலாத்காரம் என்பதற்கு அர்த்தம் என்ன?. நாங்கள் செட்டில் அமர்ந்திருந்தோம். 200 பேர் எங்களுக்கு முன் உட்கார்ந்திருந்தார்கள். நான் என்ன சொல்ல? 

அவர் வழக்கு தொடர்ந்தா சட்டப்படி எதிர்கொள்வேன். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேனோ அதனை என் வாழ்வில் தொடர்வேன்” என்றார்.

2008ம் ஆண்டு இந்தக் குற்றச்சாட்டை நானா படேகர் மீது தனுஸ்ரீ கூறியிருந்தார். அப்போது, “என்னுடைய மகள் வயதினை ஒத்த ஒரு பெண் இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது” என்று மறுத்தார் நானா படேகர். 

சமீபத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமிதாப் பச்சனிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் தனுஸ்ரீயும் இல்லை, நானா படேகரும் இல்லை, அப்படி இருக்கையில் என்னிடம் ஏன் இதுகுறித்து கேட்கிறீர்கள்” என்று காட்டமாக அமிதாப் பதில் அளித்தார்.