‘காலா’ படத்தின் டப்பிங் வேலைகளை நானா படேகர் முடித்து கொண்டுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’வின் பணிகள் மிக வேகவேகமாக நிறைவடைந்து வருன்கின்றன. இப்படத்தின் டீசர் சமீபத்தில்தான் தனுஷ் வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி, ‘வேங்கை மகன் ஒத்தையிலே நிக்கென் தில்லிருந்தா மொத்தமா வாங்கலெ’ என அவர் பேசியிருந்த வசனம் பெரிய வைரலானது. இந்நிலையில் ‘காலா’படத்தின் நடித்துள்ள நானா படேகர் தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாவது உறுதியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ள இப்படத்தினை லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி,அஞ்சலி படேல் ,சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.