சமந்தா, நாக சைதன்யா, சோபிதா எக்ஸ் தளம்
சினிமா

சமந்தாவுடன் விவாகரத்து | ”இன்னும் விளக்கணுமா?” மவுனம் கலைத்த நாக சைதன்யா!

சமந்தாவுடனான விவாகரத்து குறித்து நாக சைதன்யா மவுனம் கலைத்துள்ளார்.

Prakash J

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நாக சைதன்யா. இவர், நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். எனினும், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக முறையே அறிவித்தனர்.

தொடர்ந்து இருவரும் விவகாரத்து பெற்றதையடுத்து, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த 2024-ம் ஆண்டு நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம், கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

சமந்தா, நாக சைதன்யா, சோபிதா

இந்த நிலையில், சமந்தாவுடனான விவாகரத்து குறித்து நாக சைதன்யா மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “நானும் சமந்தாவும் தங்களது சொந்த காரணங்களுக்காக விவாகரத்து முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். இதற்கு இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை. திருமண உறவில் இருந்து பிரிந்து நாங்கள் இருவரும் எங்களது சொந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஏன் என்னைக் குற்றவாளிபோல் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “நான் 'உடைந்த' குடும்பத்திலிருந்து வந்தவன். எனவே அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஓர் உறவை முறித்துக் கொள்வதற்கு முன், நான் 1000 முறை யோசிப்பேன். ஏனென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி நான் நன்றாக அறிவேன்.

இது இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. அது நடந்ததில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் எல்லாமே ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது. இந்த முடிவுக்கு ரசிகர்களும், ஊடகங்களும் மதிப்பளிக்க வேண்டும். எங்களது முடிவில் தனி உரிமை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இருவரும் கருணையுடன் நகர்ந்து சென்றுவிட்டோம். இப்போது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “சோபிதாவை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர், இந்த விவகாரத்திற்குப் பொறுப்பானர் அல்ல. இந்த விஷயத்தில் அவர்மீது எந்தத் தவறும் இல்லை. அவருக்கு என் கடந்த காலத்தோடு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அதேநேரத்தில், நான் அவருக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். அவர் மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய நபர். அவ்வளவு முதிர்ச்சியுடன் இதையெல்லாம் கடந்து சென்றார். அவர் பல வழிகளில் எனக்கு ஒரு உண்மையான ஹீரோவாக உள்ளார். இன்ஸ்டாவில் எங்கள் நட்பு தொடங்கியது. அங்கிருந்தே எங்கள் உறவு மெல்ல கட்டமைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ள்ளார்.