சினிமா

ராதாரவி,சரத்குமார் மீது நில அபகரிப்பு புகார்

ராதாரவி,சரத்குமார் மீது நில அபகரிப்பு புகார்

webteam

நடிகர் சங்க நிலத்தை அபகரித்ததாக ராதாரவி, சரத்குமார் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக அச்சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது மீண்டும் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான சுமார் ஒன்றரை கோடி ரூபாய்‌ மதிப்பிலான இடத்தினை, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக நால்வர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே ராதாரவி, சரத்குமார், கே.ஆர்.செல்வராஜ், நடேசன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.