சினிமா

"என்னைப்போலவே தம்பிங்க விஜய், சிம்பு இரண்டுபேருமே அன்பாகத்தான் இருப்பாங்க’’ - சீமான்

"என்னைப்போலவே தம்பிங்க விஜய், சிம்பு இரண்டுபேருமே அன்பாகத்தான் இருப்பாங்க’’ - சீமான்

Sinekadhara

’’என்னைப்போலவே தம்பிங்க விஜய், சிம்பு இரண்டுபேருமே அன்பாகத்தான் இருப்பாங்க’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றபிறகு, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், மாஸ்டர் பட வெளியீடு காரணமாக சிம்பு படத்தை வெளியிடுவதில் சதி செய்கிறார்கள் என்று டி.ராஜேந்தர் பேசியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘’இரண்டு பேருமே என் தம்பிகள். இரண்டு பேருடைய படங்களுமே வரணும்னுதான் நான் நினைப்பேன். மாஸ்டர் படத்தை வாங்கி விநியோக்கிறவங்க அப்படி செய்தாலும் கூட, என் தம்பி விஜய் ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டாரு. என்னைப்போலவே விஜய், சிம்பு இரண்டுபேருமே அன்பாகத்தான் இருப்பாங்க.

ஒருவேளை வாங்கி விநியோகம் பண்றவங்க விஜய் படத்தை அதிகத் தொகை கொடுத்து வாங்கியதுனால, சிம்பு படமும் வெளிவந்தால் வசூல் பாதிக்கப்படும்னு நினைத்து இருக்கலாம். அதனால் முதலில் மாஸ்டரில் வசூலித்து முடிச்சுட்டு சிம்பு படத்தை வெளியிடலாம்னு நினைக்கலாம்.

ஆனால், முன்பெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கு 10 -15 படங்கள் வெளிவரும். அந்த முறையை ஏன் ஒழிச்சுட்டாங்கன்னு தெரில. இப்போதெல்லாம் ரஜினி, கமல், அஜித், விஜய் என யாராவது ஒருவர் படம்தான் வெளிவருகிறது. இதை சரிசெய்யணும். படங்களை வாங்கி விநியோகிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்’’ என்றார்.

மேலும் ரஜினி அரசியல் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு தவறல்ல; அதேசமயம் அவரது ரசிகர்கள் அவரை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், அவர் நிம்மதியாக பல படங்கல் நடிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்