பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் நாச்சியார் படத்தை ஆயுத பூஜை விருந்ததாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
36 வயதினிலே மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா நல்ல கதைகளை கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து கவனித்து நடித்து வருகிறார். அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாலா படம் என்றதுமே உடனே ஒகே சொன்னார் ஜோதிகா. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நாச்சியாரின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் படத்தை ஆயுத பூஜை விருந்தாக செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்பைடர் ஆகிய திரைப்படங்களையும் ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.