சினிமா

விலகிய மிஷ்கின்? இயக்குநராகும் விஷால்? - குழப்பத்தில் துப்பறிவாளன்2

விலகிய மிஷ்கின்? இயக்குநராகும் விஷால்? - குழப்பத்தில் துப்பறிவாளன்2

webteam

துப்பறிவாளன்2 திரைப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதாக செய்திகள் வெளியான நிலையில் மீதிப்படத்தை விஷாலே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

விஷால், பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். மிஷ்கின் இந்தப் படத்தை இயக்கினார். துப்பறியும் கதையான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஎஃப்எஃப் மூலமே படத்தை தயாரிக்க முன்வந்தார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக சென்றதால் விஷாலோடு பிரச்னை ஏற்பட்டதாகவும் இதனால் படத்தில் இருந்து மிஷ்கின் விலகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

துப்பறிவாளன்2 படத்தில் இருந்து மிஷ்கின் விலகிவிட்டதாக செய்திகள் பரவினாலும், படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் படத்தை கைவிடாமல் மீதி கதையை நடிகர் விஷாலே முன்னெடுத்து இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் விஷால் தரப்பும் மிஷ்கினும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், உடன்பாடு ஏற்பட்டதால் மிஷ்கினே படத்தை தொடர்ந்து இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.