பிக் பாஸ் சீசன் 8 hot star
சினிமா

பிக்பாஸ் சீசன் 8 டைட்டிலை வென்று மகுடம் சூடினார் முத்துக்குமரன்!

பிக்பாஸ் சீசன் 8-ன் கிராண்ட் ஃபனலில் மேடை பேச்சாளர் முத்துக்குமரன் வெற்றிபெற்று டைட்டிலை தட்டிச்சென்றார்.

Rishan Vengai

தமிழில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை புது வரவாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற பாணியில் தொடங்கியது 8வது சீசன். இதில் boys vs girls என்றபடி வீட்டைப் பிரித்து விளையாடிய நிலையில், பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடத்துவங்கினர். துவக்கத்தில் அவ்வளவு பெரிதாக கவனம் ஈர்க்காத 8வது சீசன், இறுதிக்கட்டத்தில் பரபரப்பாக நகரத்துவங்கியது.

பிக்பாஸ் சீசன் 8

விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிய சீசனில், பணப்பெட்டி டாஸ்க்கை வைத்து, போட்டியாளர்களின் வயிற்றில் புலியை கரைத்தார் பிக்பாஸ். இதில், deserved person ஆன ஜேக்குலின், பணப்பெட்டியை எடுக்கச் சென்று சரியான நேரத்தில் திரும்ப முடியாததால் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான், முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐவர் ஃபைனலுக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் துவக்கத்தில் இருந்து மக்கள் மனதை வென்ற முத்துக்குமரன் வெற்றிபெற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர். அதன்படியே, இறுதியாக முத்துவின் AVயைப் போட்டு, உங்களின் பயணத்தை ஒருவார்த்தையில் சொல்ல வேண்டுமானால் உழைப்பு என்று கூறி உச்சி முகர்ந்து பேசினார் பிக்பாஸ்.

பிக்பாஸ் சீசன் 8 டைட்டிலை வென்றார் முத்துக்குமரன்.. 

24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 ஆனது, 100 நாட்களை கடந்து இறுதிப்போட்டியை எட்டியது. 24 போட்டியாளர்களிலிருந்து 5 போட்டியாளர்களாக ஃபில்டர் செய்யப்பட்டு முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயான், விஷால், பவித்ரா ஜனனி முதலியோர் வெற்றிக்காக இறுதிப்போட்டியில் களம்கண்டனர்.

யாருக்கு டைட்டில் செல்லும் என்ற விறுவிறுப்பான கட்டத்தில், சில தினங்களாக முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆதரவாளர்களுக்கு இடையே சோசியல் மீடியாவில் fan war நடந்து வந்தது. அதன்படியே இறுதிப்போட்டியிலும் அந்த இரண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னர் யார் என்ற கிராண்ட் பைனல் இன்று நடைபெற்றது. இதில் 5வது இடத்தை பிடித்து முதலில் ரயான் வெளியேறினார், பின்னர் பவித்ரா 4வது இடத்தை பிடித்த நிலையில், ரசிகர்களின் விருப்பத்தேர்வான விஜே விஷால், சௌந்தர்யா, முத்துக்குமரன் மூன்று பேரில் யார் அடுத்து வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு தொற்றியது.

இதற்கிடையில் விஜய் சேதுபதி பிரேக், ஏவிக்கள் என ஒவ்வொன்றாக போட்டு ஹைப் ஏற்ற ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் போட்டியாளர்களுக்கும் பிரெஸ்ஸர் ஏறியது. இந்த சூழலில் 3வது இடத்திற்கான பெயரில் விஜே விஷாலின் பெயர் அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இறுதி இரண்டு போட்டியாளர்களாக முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா நீடித்த நிலையில், விஜய சேதுபதி தன்னுடைய புதிய பயணத்துக்காக விஜய் டிவி, மக்கள் மற்றும் கமல்ஹாசன் முதலியோருக்கு நன்றி தெரிவித்தார். இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியே தொகுப்பாளராக தொடர்வார் என கூறப்பட்டது.

முடிவில் யார் வெற்றியாளர் என்ற அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி, முத்துக்குமரின் கையை தூக்க முதல் இடத்தைப் பிடித்து trophy ஐ தட்டித்தூக்கினார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.