சொந்தமாக வெப்சைட் ஒன்றை தொடங்குகிறார் யுவன் சங்கர் ராஜா. அது தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இசை உலகில் தன் பாதத்தை அழுத்தமாகப் பதித்தவர் யுவன் சங்கர் ராஜா. தந்தை பெரிய இசையமைப்பாளர் என்றாலும் அவரிடம் இருந்து இசை ஞானத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு தன்னை தானே உருவாக்கிக் கொண்டவர் . காதல், நட்பு, அம்மா, அப்பா, சோகம், ஏக்கம், கொண்டாட்டம் என அனைத்து தரப்பிலும் யுவனின் பங்கு உண்டு. நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் யுவனின் பாடல்கள் நமக்கு துணையாகவே வரும். பாடல்களுக்கான இசை மட்டுமே இல்லை. பின்னணி இசையிலும், மாஸ் பிஜிஎம்களில் யுவன் தனித்து நின்றவர்.
திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு நிகராக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள யுவன் சங்கர் ராஜா தற்போது சொந்தமான வெப்சைட் ஒன்றை தொடங்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். U1 Records வெப்சைட்டை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். பிப்ரவரி 10 மதியம் 2 மணிக்கு வெப்சைட் தொடக்கம் என தெரிவித்துள்ளார்.
www.u1records.com என்ற இணையப்பக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய இசை தொடர்பான பல விஷயங்களை அவர் இணையப்பக்கத்தில் பகிர்வார் என தெரிகிறது. யுவனின் இணையப்பக்கத்தைக் காண இசை ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.