சினிமா

இளையராஜாவிற்கு சிறப்பு சாதனையாளர் விருது

இளையராஜாவிற்கு சிறப்பு சாதனையாளர் விருது

webteam

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கோவா திரைப்பட விழாவில் சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

கோவாவில் 50-வது திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் தொடக்க நாளில் நடிகர் ரஜினிகாந்துக்கு 'icon of golden jubilee' விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8 நாட்களாக நடைபெற்ற திரைப்பட விழா இன்றுடன் நிறைவடைகிறது. 

நிறைவு விழாவில் திரையிசையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியமைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் அரவிந்த்சாமிக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருது 'ஜல்லிக்கட்டு' படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசேரிக்கு வழங்கப்பட்டது.