பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் விரைவாக குணம்பெற்று வர வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாலு சார், இந்த உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் தினமும் உங்களுக்காக பிரார்த்தனை செய்துவருகிறோம். பூரணமாக குணமடைந்து நலமுடன் வீடு வந்து சேரவேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவாவும், அங்கிள், உங்களுக்காக இந்த உலகமே பிரார்த்தனை செய்கிறது. விரைவில் குணமடைய மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.