சினிமா

ஆவணத் தொடரில் பணியாற்றியது தனித்துவமான அனுபவம்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

webteam

'House of Secrets: The Burari Deaths' எனும் இணைய ஆவணத் தொடரில் பணியாற்றியது தனித்துவமான அனுபவம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

2018-ல் டெல்லியில் நிகழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணத் தொடரை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். நெட்பிளிகிஸ் ஓடிடி தளத்தில் வருகிற 8-ம் தேதி இந்த தொடர் வெளியாகவுள்ள உள்ள நிலையில், உணர்வுப் பூர்வமான ஒரு உண்மைச் சம்பவத்தை அதன் உண்மைத் தன்மை பாதிக்காத வகையில் இயக்குநர் ஆவணமாக்கியிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். இத்தொடருக்கு இசையமைத்தது தனித்துவமான அனுபவம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.