சினிமா

‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

webteam

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில், அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்தது. அக்டோபர் 20ம் தேதி நடைபெறும் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் முதலமைச்சருடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. முதல்வர் பழனிசாமி, நடிகை ஷோபனா உள்ளிட்டோருடன் கௌரவ டாக்டர் பட்டம் பெறுவதில் கௌரவம் என ஹாரிஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். திரையுலகில் போட்டி மானப்பான்மையுடன் இல்லாமல் சக கலைஞருக்கு மரியாதை செய்வதை ஏ.ஆர்.ரகுமான் வழக்கமாக கொண்டுள்ளார்.