சினிமா

ஹாலிவுட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்கிறார்?

ஹாலிவுட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்கிறார்?

webteam

ஹாலிவுட் படம் ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்கிறார் என்று தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக செய்தி வலம் வந்து கொண்டிருந்த வேளையில் அதற்குள் அவர் அக்ஷய் குமாரை வைத்து ஹாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்ய இருக்கிறார் என செய்தி வெளியாகி வருகிறது. மில்லியன் டாலர் பேபி என்ற ஹாலிவுட் படத்தை அவர் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைபடம் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தெரிகிறது. இதில் தொலைக்காட்சி நடிகை மரினா குவார் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மரினா “அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடிப்பது ஒரு கனவு. மாடலிங் உலகிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தது என்பது பெரும் போராட்டமே. நிச்சயம் ஒரு நாள் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேன்” என கூறியுள்ளார் மரினா. இவர் சி.ஐ.டி. என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனிலும் கலந்து கொண்டார்.