சினிமா

‘மூன்றெழுத்து’ படத்தின் ‘வீடியோ’ ‘வைரல்’ என்ற மூன்றெழுத்தாகியது !

‘மூன்றெழுத்து’ படத்தின் ‘வீடியோ’ ‘வைரல்’ என்ற மூன்றெழுத்தாகியது !

webteam

மூன்றெழுத்து திரைப்படத்தின் வசனம் ஒன்றின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

1968ஆம் ஆண்டு ஆண்டு ரவிச்சந்திரன், ஜெயலலிதா, நாகேஷ் மற்றும் அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் ‘மூன்றெழுத்து’. இந்தப் படத்தை டி.ஆர். ரமன்னா இயக்கினார். இதற்கு டி.என்.பாலு வசனம் எழுதினார். படத்தில் வரும் ஒரு காட்சியில் மூன்றெழுத்துக்களை வைத்து அனைவரும் வசனம் பேசிவிட்டு செல்வார்கள். ‘காதல்’ என்ற மூன்றெழுத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தக்கும் அந்த வசனம், ‘அமைதி’ என்ற மூன்றெழுத்தில் முடிவடையும். 

இதற்கிடையே காட்சியில் இருக்கும் அனைவருமே மூன்றெழுத்து என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்தி வசனம் பேசுவார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி ‘வைரல்’ என்ற மூன்றெழுத்தாகியுள்ளது. இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் ‘யாருப்பா எழுத்தாளர்’ எனவும் கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.