Rambo Arulnithi, Muthaiya
திரை விமர்சனம்

விறுவிறுப்பாக இருக்கிறதா அருள்நிதியின் ஆக்ஷன் த்ரில்லர்? | Rambo Review | Arulnithi | Muthaiya

ஆசிரமத்தில் யாரும் இல்லை வில்லியிடம் அடியாட்கள் சொல்கிறார்கள். அதை கேட்கும் அவர் பொடனிக்கு பின்னால் அமர்ந்திருக்கும் வில்லனிடம் திரும்பி ஆசிரமத்தில் யாரும் இல்லையாம் என்கிறார். அடியாட்கள் சொன்னால் மெய்ன் வில்லன் காதில் கேட்காதா?

Johnson

No 1-ஆக எதையும் செய்யும் வில்லன் vs நன்மை செய்ய No 1-ஆக நிற்கும் ஹீரோ

ராம்போ (அருள்நிதி) மதுரையில் வசிக்கும் இளைஞர். தன் அம்மா கவனித்துக் கொண்ட ஆதரவற்றோர் இல்லத்தை இப்போது அவர் பார்த்துக் கொள்கிறார். ஒருகட்டத்தில் ஆதரவற்றோர் இல்லத்தை காப்பாற்றிக் கொள்ள பணத்தேவை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் மலர் (தான்யா ரவிச்சந்திரன்) தன்னுடைய உயிரை தொழிலதிபர் கௌதமிடம் (ரஞ்சீத் சஜீவ்) இருந்து காத்துக் கொள்ள திருச்சியிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்க மதுரை வருகிறார். ஒரு புள்ளியில் இந்த இரு கோடுகளும் இணைகின்றன. அதன் பின் என்ன ஆகிறது? ராம்போ - கௌதம் இடையேயான பழைய பகை என்ன? போன்றவற்றை சொல்கிறது மீதிக்கதை.

முத்தையா தன் முந்தைய படங்களில் இருந்து விலகி புதிதான ஒரு படத்தை கொடுக்க முன்றிருக்கிறார். ஹீரோயின் யார் என்பதில் இருக்கும் மர்மம் படத்தின் துவக்கத்தில் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஹீரோயினை காப்பாற்ற ஹீரோ செய்யும் ஒரு ஐடியா என சில விஷயங்கள் படத்தில் ப்ளஸ் என சொல்லலாம்.

Rambo

இந்த மொத்த படத்திலும் பெரிதாக மெனக்கெட்டு நடிப்பதற்கான வாய்ப்பு இந்தப் படத்தில் இல்லை என்பதால், எல்லா நடிகர்களும் ஒரு சம்பிரதாயமான நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள். லீட் ரோலில் வரும் அருள்நிதி, தன்யா, ரஞ்சீத் சஜீவ் தொடங்கி சின்ன ரோலில் வரும் சரண்ராஜ், ஜென்சன் உட்பட வழக்கமான மீட்டரிலேயே வந்து போகிறார்கள். ஜிப்ரான் இசை, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்க முயலுகிறது.

உனக்கு மேல் யாரும் இருக்கக் கூடாது என சொல்லி வளர்க்கப்படும் வில்லன், உன்னை நம்புபவர்களை கைவிடாதே என சொல்லி வளர்க்கப்படும் ஹீரோ, இந்த இருவரும் மோதிக் கொள்ள போகிறார்கள்.. எப்படி? என துவங்கும் கதை, ஒரு கமர்ஷியல் படத்திற்கு போதுமான ஒன்றுதான். ஆனால் திரைக்கதையாக இப்படம் சொல்லப்படும் விதம் சோதிக்கிறது. உதாரணமாக ஒரு காட்சியில் அடியாட்கள் சென்று ஆசிரமத்தில் யாரும் இல்லை என பார்த்து அதை வந்து வில்லியிடம் சொல்கிறார்கள். அதை கேட்கும் அவர் பொடனிக்கு பின்னால் அமர்ந்திருக்கும் வில்லனிடம் திரும்பி ஆசிரமத்தில் யாரும் இல்லையாம் என்கிறார். அடியாட்கள் சொன்னால் மெய்ன் வில்லன் காதில் கேட்காதா?

Rambo

ஒரு கதாபாத்திரம் வீடியோவில் வந்து சாட்சி சொல்லவே பாதுகாப்பு இல்லை என்பது, தன்யாவுக்கு அருள்நிதி மேல் காதல் வருவது என லாஜிக் ஒரு பக்கம் அடிவாங்க, எளிதில் கணிக்க முடிகிற திருப்பங்கள் இன்னும் சோர்வூட்டுகிறது. அதிலும் ஹீரோ - வில்லன் இடையேயான கெமிஸ்ட்ரி, அடேங்கப்பா. "என்ன சொன்னாலும் கேக்குறியேடா" என கூலியில் கல்யாணியிடம் ஏமாறும் கண்ணா ரவி போல, ஹீரோ என்ன சொன்னாலும் சரிங்க என சமத்தாக கேட்டுக் கொள்கிறார் வில்லன். என்ன மாதிரி வில்லனிசம் இது? `ராம்போ' என பெயர் வைத்துவிட்டோமே என படத்தில் வலிந்து தினிக்கப்பட்டுருக்கும் பாக்சிங் காட்சிகள் கொடூர டார்ச்சர். இந்தப் படத்தில் எதுக்குப்பா பாக்சிங் என்ற கேள்வி படம் முழுக்க எழுந்து கொண்டே இருக்கிறது.

மொத்தத்தில் சுத்தமாக சுவாரஸ்யம் இல்லாத, அடிப்படையான திரைக்கதை கூட இல்லாத ஒரு படமாக முடிகிறது இந்த  ராம்போ.