பிரபல இயக்குனரும் சாண்டோ சின்னப்பாத்தேவரின் மருமகனுமான ஆர். தியாகராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது. 75
ரஜினிகாந்த் நடிப்பில், தாய் மீது சத்தியம், தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, ரங்கா உட்பட 11 ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.தியாகராஜன். மேலும், வெள்ளிக்கிழமை விரதம், தாய் இல்லாமல் நானில்லை, ஆடுக்கார அலமேலு உட்பட மொத்தம் 28 படங்களை இயக்கியுள்ளார். சாண்டோ சின்னப்பா தேவரின் மூத்தமகள் சுப்புலட்சுமி, இவர் மனைவி. சென்னை போரூரில் வசித்து வந்த இவருக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடக்கிறது.
மறைந்த தியாகராஜனுக்கு வேல்முருகன் என்ற மகனும் சண்முகவடிவு என்ற மகளும் உள்ளனர்.