சினிமா

சுவாதி கொலைவழக்கு பட பெயர் நுங்கம்பாக்கம் என மாற்றம்

சுவாதி கொலைவழக்கு பட பெயர் நுங்கம்பாக்கம் என மாற்றம்

webteam


சுவாதி கொலை வழக்கு படத்தின் தலைப்பு நுங்கம்பாக்கம் என்று மாற்றப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலையை மையமாக வைத்து சுவாதி கொலை வழக்கு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
திரைப்படத்தில் இயக்குனர் ரமேஷ் செல்வத்துக்கு எத்திராக சுவாதியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸ் கைது செய்யலாம் என்று அஞ்சி ரமேஷ் செல்வம் முன்ஜாமின் தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அப்படக்குழுவினர், தற்போது சர்ச்சைக்கு உள்ளான சுவாதி கொலைவழக்கு  படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் எனமாற்றியுள்ளோம். படத்தில் இடம்பெற்றுள்ள கேரக்டர்களின் பெயர்களும் மாற்றப்படும். சென்னை சுவாதி கொலை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட படம் சில கற்பனை காட்சிகள் சேர்க்கப்பட்டு நுங்கம்பாக்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில்  யாரையும், இழிவு படுத்தியோ, யாரையும் அவமதித்தோ உருவாக்கப்படவில்லை’ எனக் கூறினர்.