சினிமா

2020 அதிக ட்வீட்களில் டாப் 10- நடிகைகளில் தென்னிந்தியா ஆதிக்கம்; கீர்த்தி சுரேஷ் முதலிடம்!

2020 அதிக ட்வீட்களில் டாப் 10- நடிகைகளில் தென்னிந்தியா ஆதிக்கம்; கீர்த்தி சுரேஷ் முதலிடம்!

sharpana

ட்விட்டரில் இந்திய அளவில் 2020 ஆம் ஆண்டில் நடிகைகள் குறித்து குவிக்கப்பட்ட ட்வீட்களின் டாப் 10 பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடம் வகித்துள்ளார். இதனை, ட்விட்டர் இந்தியா இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ட்விட்டர் இந்தியா வெளியிட்ட அந்தப் பட்டியலில் ’காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா, பூஜா ஹெக்டே,டாப்சி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதிஹாசன், த்ரிஷா’ ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இதில், இடம்பிடித்த நடிகைகளில் அனைவருமே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவே ஆதிக்கம் செலுத்தியிருப்பது கவனத்துக்குரியது.

2020 ஆம் ஆண்டில் கொரோனா சூழலால் பெரிய ஹீரோக்களின் படங்களே வெளியாகவில்லை. ஆனால், கீர்த்தி சுரேஷ் நடித்த ’பென்குயின்’, ’மிஸ் இந்தியா’ என இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.