சினிமா

சிம்பு படம் காலை காட்சி கேன்சல்!

சிம்பு படம் காலை காட்சி கேன்சல்!

Rasus

சிம்பு நடித்துள்ள, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் காலை காட்சி இன்று ரத்து செய்யப்பட்டது.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. எப்போதோ முடிந்திருக்க வேண்டிய படம் சிம்புவின் கால்ஷீட் பிரச்னையால் தள்ளிப் போனதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே படத்துக்கு எதிராக ரமேஷ் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். அவருக்கு கொடுக்க வேண்டியதாக கூறப்படும் ரூ.25 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் அளித்ததை அடுத்து படம் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் கடைசி நேர பைனான்ஸ் பிரச்னை காரணமாக காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.