Mohanlal Nedumkandam Miracle
சினிமா

புதுப்படத்தை அறிவித்த மோகன்லால்! | Mohanlal | Dileesh Pothan

சமீபத்தில் வெளியான `த்ரிஷ்யம் 3'. மிகப்பெரிய ஹிட்டானது. இதற்கடுத்தாக தருண் மூர்த்தி இயக்கத்தில் `Athimanoharam' படத்தில் நடித்து வருகிறார்.

Johnson

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான `த்ரிஷ்யம் 3'. மிகப்பெரிய ஹிட்டானது. இதற்கடுத்தாக தருண் மூர்த்தி இயக்கத்தில் `Athimanoharam' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்ததாக மோகன்லால் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஃபகத் பாசில் நடிப்பில் `Maheshinte Prathikaaram', `Joji', சுராஜ் நடிப்பில் `Thondimuthalum Driksakshiyum' படங்களை இயக்கிய திலீஷ் போத்தன்தான் மோகன்லாலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கு `Nedumkandam Miracle' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஷ்யாம் புஷ்கரன் மற்றும் பால்சன் ஸ்காரியா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சைஜு காலித் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை என வலுவான கூட்டணி இப்படத்துக்காக இணைந்துள்ளது.

மோகன்லால் தற்போது 'Thudarum' இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடித்து வரும் `Athimanoharam' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம், டிசம்பர் 24 அன்று வெளியாக உள்ளது.

Mohanlal

அடுத்து ரஷ்யப் படையெடுப்பின்போது உக்ரைனின் அண்டை நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட 'ஆபரேஷன் கங்கா' என்ற மீட்பு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட 'L 367' என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட படத்திலும் நடிக்கிறார். இதனை `மேப்படியன்' இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளார். பின்னர் பிரியதர்ஷன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மோகன் லால்.