சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா!

விஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா!

webteam

விஜய் சேதுபதி நடிக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் இயக்குநர் மோகன் ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படம், ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’.  விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். அவர் ஜோடியாக இருவர் நடிக்கின்றனர். ஒருவர் அமலா பால். இன்னொரு ஹீரோயினாக வெளிநாட்டு நடிகை நடிக்கிறார். இந்த படத்தின் கதை, சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்னையை பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் மற்றொரு இயக்குநர் மோகன் ராஜா இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதை படக்குழு அறிவித்துள்ளது.