பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேண்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனாவுக்காக பிளாஸ்மாக சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.