சினிமா

நள்ளிரவு 12 மணி ! ’பிசாசு 2’ அறிவித்தார் மிஷ்கின்

நள்ளிரவு 12 மணி ! ’பிசாசு 2’ அறிவித்தார் மிஷ்கின்

sharpana

தனது அடுத்தப் படமாக ’பிசாசு 2’ எடுக்கப்போவதாக  இன்று 12 மணிக்கு அறிவித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் மிஷ்கினின் முதல் படம் ’சித்திரம் பேசுதடி’ கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த பதினான்கு வருடங்களில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட குறிப்பிட்ட படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான சைக்கோ படத்திற்குப் பிறகு விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்படத்தை மிஷ்கின் கைவிட்டார்.

பிரயாகா

இந்நிலையில், அவர் பிறந்தநாளான இன்று ’பிசாசு 2’ படத்தின் அறிவிப்பை அதிகாலை 12 மணிக்கு அறிவித்திருக்கிறார். பிசாசு படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். 

ராஜ்குமார் பிச்சுமணி

ஒரே காட்சியில் வந்திருந்தாலும் பிசாசாக நடித்த பிரயாகா மீண்டும் வரமாட்டாரா என்று அழகில் கொள்ளை கொள்ளவைத்தார். பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா, சைக்கோ படத்தின் வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்ட்ரியா சுந்தர்சி இயக்கத்தில் ஏற்கனவே பேயாக ‘அரண்மனை’ படத்தில் மிரட்டியிருப்பதால், இப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன.