சினிமா

‘மிக மிக அவசரம்’ படத்தின் நாயகியை பாராட்டிய கடம்பூர் ராஜூ..!

‘மிக மிக அவசரம்’ படத்தின் நாயகியை பாராட்டிய கடம்பூர் ராஜூ..!

Rasus

‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை பார்வையிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா பெண் காவலராக நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி.ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 8-ஆம் தேதி வெளியாகுகிறது. இதனிடையே இப்படத்தின் சிறப்புக் காட்சியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். படத்தில் நாயகி ஸ்ரீ பிரியங்கா, பெண் காவலரின் கதாபாத்திரத்தை கச்சிதமாக கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார். அப்போது ஸ்ரீ பிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர். மிக மிக அவசரம் படம் காவலர்களின் பணி சிரமங்களை எடுத்துரைத்துள்ளது.