சினிமா

விஜய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் !

விஜய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் !

webteam

ஓசூரில் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி, விஜய் ரசிகர்கள் நடத்திய தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன பேரணியில் அமைச்சர் பங்கேற்றார். 

நடிகர் விஜயின் 44-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்தநாளையொட்டி, அவருடைய ரசிகர்கள் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வருகின்றனர். திரைபிரபலங்கலும் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் விஜயின் பிறந்தநாளான இன்று, அவரது ரசிகர்கள் சார்பில் 50-கும் மேற்ப்பட்ட இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தவாறு விழிப்புணர்வு பேரணி நடத்தினர், இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பங்கேற்று கொடி அசைத்து பேரணியை துவைக்கி வைத்தார்.

முக்கிய விதிகளின் வழியாக பேரணி வந்த ரசிகர்கள், பின்பு மூக்கண்டப்பள்ளியில் உள்ள தோப்பம்மா கோவிலில் விஜய் பிறந்தநாளுக்காக சிறப்பு பூஜைகள் செய்து, ஏழை, எளிய மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினர். இதில் ஓசூர் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.