தீபாவளிக்கு ‘மேயாத மான்’ திரைப்படம் வெளிவருவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் சின்னத்திரை புகழ் ப்ரியா பவானிஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து முகவரி பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக கார்த்திக் சுப்புராஜ் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.