சினிமா

‘சிலாக்கி.. டும்’: ட்ரெண்டான வடிவேலுவின் மெர்சல் டயலாக்!

‘சிலாக்கி.. டும்’: ட்ரெண்டான வடிவேலுவின் மெர்சல் டயலாக்!

webteam

மெர்சல் படத்தின் இரண்டு ‘ப்ரமோ’க்கள் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மெர்சல் படம் மூலம் விஜய் - வடிவேலு காமெடி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விஜய் - வடிவேலு காமெடி ஃப்ரெண்ட்ஸ், சச்சின், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் பட்டையை கிளப்பியது. கதைக்கு ஏற்றவாறு காமெடிகள் இருந்தால் ரசிகர்கள் வெகுவாக அதனை விரும்பினர். மெர்சல் படத்தின் ப்ரமோவை இன்று படக்குழு வெளியிட்டது.

வடிவேலு மற்றும் விஜய் கிரிக்கெட் ஆடுகின்ற காட்சி இடம்பெறுகிறது. அதில் வடிவேலு பேட்டிங் செய்வது போலும், விஜய் பந்து வீசுவது போலும் காட்சிகள் உள்ளன. அதில் வடிவேலு வேஷ்டி சட்டை அணிந்து தனக்கே உரித்தான பாணியில் கிரிக்கெட் மட்டையை கையில் வைத்திருக்கிறார். இந்தக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ப்ரமோவின் இறுதியில், ‘சிலாக்கி.. டும்’ என்று அவருக்கே உரித்தான ஸ்டைலில் கூறுகிறார். இந்த வார்த்தையை பெரிதும் ரசித்த இணையவாசிகள் தற்போது அந்த வார்த்தையை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.