சினிமா

மெர்சலுடன் மோதும் நெஞ்சில் துணிவிருந்தால்...!

மெர்சலுடன் மோதும் நெஞ்சில் துணிவிருந்தால்...!

webteam

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கும் மெர்சல் படத்துடன் சுசீந்திரன் இயக்கியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படமும் ரிலீசாக இருக்கிறது. 

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சுந்தீப் கிஷான், விக்ராத் நடித்துள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப்படம் விஜய் நடித்துள்ள மிகப்பெரிய படமான மெர்சல் படம் வெளியாகும் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், ‘எங்களுடைய திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா? என கேட்கிறார்கள். இல்லை நாங்கள் மெர்சல் உடன் வருகிறோம்.

2013ஆம் ஆண்டு பாண்டியநாடு திரைப்படத்தை அஜித் படத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றிப்பெற்றது. எங்கள் படமும் வெற்றிப்பெற்றது’ எனத் தெரிவித்துள்ளார். படத்தலைப்பில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நெஞ்சில் துணிவிருப்பவர்கள்தான் போல இந்தப் படக்குழுவினர்.