சினிமா

தெலுங்கு மெர்சல் நாளை வெளியாகாது: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

தெலுங்கு மெர்சல் நாளை வெளியாகாது: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

rajakannan

விஜய் நடித்த மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி நாளை வெளியாகாது என தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று தமிழில் வெளியானது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளியான எல்லா இடங்களிலும் திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் புதிய சாதனைகளை மெர்சல் திரைப்படம் படைத்தது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு மேலாக சர்ச்சை நீடித்த போது காட்சிகள் எதுவும் படத்தில் இருந்து நீக்கப்படவில்லை.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படம் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தெலுங்கு மெர்சல் நாளை வெளியாகாது என்று தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தெலுங்கு பதிப்பு மெர்சலில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் நீக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.