விவேகம் டீசர் வெளியாகி உலக சாதனை படைத்தது. அந்த சாதனையை முறியடித்திருக்கிறது மெர்சல் டீசர்.
அஜித்தின் விவேகம் டீசர் வெளியாகி 5லட்சத்து 98 ஆயிரம் லைக்ஸ் வாங்கி உலக சாதனை படைத்தது. இந்த உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் தலயை கொண்டாடி மகிழ்ந்தார்கள். அஜித் டீசர் வெளியாகி நான்கு மாதங்கள் கழித்துதான் இந்த எண்ணிக்கையை தொட முடிந்தது. ஆனால் விஜய்யின் மெர்சல் டீசர் அட்லீயின் பிறந்தநாளான இன்று வெளியானது. வெளியான நான்கு மணி நேரத்தில் ஆறு லட்சம் லைக்ஸை தொட்டு முன்னேறிப் போய் கொண்டிருக்கிறது. உலகிலேயே நான்கு மணிநேரத்தில் இத்தனை லட்சம் லைக்ஸை அள்ளிய டீசர் வேறு எதுவும் கிடையாது. இந்த சாதனையால் அஜித் சாதனையை முறியடித்திருக்கிறார் விஜய். அதுவும் நான்கு மணிநேரத்தில். உற்சாக கொண்டாட்டத்தில் மூழ்கி குளிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.